கோவை: அ.தி.மு.க., முரண்பாடுள்ள கட்சி என்று தி.மு.க., மகளிரணி செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி விமர்சித்துள்ளார்.
கோவை: அ.தி.மு.க., முரண்பாடுள்ள கட்சி என்று தி.மு.க., மகளிரணி செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி விமர்சித்துள்ளார்.
கோவை - திருப்பூர் மாவட்டங்களில் மகளிர் ஆய்வு கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக கோவை விமான நிலையம் வந்த தி.மு.க., மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி.,க்கு அக்கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், "முரண்பாடுள்ள ஒரு கட்சியாக அ.தி.மு.க., உள்ளது. அக்கட்சியிலேயே ஒருவர் ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை பற்றி மேடையில் பேசுகின்றார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மக்களை அச்சுறுத்துவதற்காக நடத்தப்பட்டது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். யார் வாய் திறந்தாலும் அவர்களை கைது செய்கின்றனர். எட்டு வழிச்சாலை அமைப்பதில் அரசு சர்வதிகாரியாக நடந்து கொள்கின்றது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., போன்ற தீவிரவாத அமைப்புகள் போய் விட்டால், மற்ற தீவிரவாத அமைப்புகளும் சென்றுவிடும்." என்றார்.